சேவைகளும் சாதனைகளும்

வல்ல அல்லாஹ்வின் உதவியால் எமது கல்லூரி இதுவரை வியக்கத்தகு முன்னேற்றங்களையும் அடைவுகளையும் கண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை பின்வரும் வரிகளில் சுருக்கமாகக் காணலாம் :

  • கற்பித்தல் துறையில் அப்பாஸிகள் இலங்கையின் பல பாகங்களிலும் சிறப்பாகப் பணிசெய்கின்றனர், அரபுக் கல்லூரிகளின் அதிபர்களாகவும் விரிவுரையாளர்களாவும் பலர் பணியாற்றுகின்றனர்.
  • தூய வடிவில் இஸ்லாத்தை எத்திவைக்கும் அழைப்புப் பணியில் எமது பட்டதாரிகளில் பலர் பரவலாக ஈடுபடுவதுடன் அவர்களில் சிலர் முத்திரை பதித்த பிரபல தாஇகளாக இருப்பதையும் காணலாம்.
  • இக்கல்லூரியில் இருந்து வெளியேறிய அப்பாஸிகளில் பலர் அரபு நாடுகளின் பல்கலைக் கழகங்களில் தற்போது உயர்க்கல்வியைத் தொடரும் அதேவேளை அவர்களுள் ஒருவர் முதுமானி (M.A) பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளதோடு மேலும் மூவர் கலாநிதி (Phd) பட்டப்படிப்பையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
  • உள்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் அப்பாஸிகள் பலர் பட்டப்படிப்பை நிறைவுசெய்துள்ளதுடன் மேலும் பலர் தற்போது கல்வி கற்று வருகின்றனர்.
  • அப்பாஸிப் பட்டதாரிகளில் ஒருவர் IDM Law School தொகுதியில் சட்டத்துறையில் அதிஉயர் ஸ்தானத்தில் சிறப்புப் பட்டதாரியாகப் பட்டம் பெற்றுள்ளார் .
  • இக்கல்லூரியிலிருந்து கல்விப் பொதுத்தராதர உ.த. பரீட்சைக்கு இதுவரை தோற்றிய 78 பேர்களில் 64 போர் (சுமார் 90%) பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகும் தகுதி பெற்றுள்ளனர்.
  • இதுவரை இக்கலாசாலையிலிருந்து கல்விப் பொதுத்தராதர சா. த. பரீட்சைக்குத் தோற்றிய 131 பேரில் 58 பேர் சகல பாடங்களிலும் சித்தியடைந்திருப்பதுடன், பொதுவாக இப்பரீட்சையில் 90% மானோர் சித்தியடைந்துள்ளனர்.
  • இக்கல்லூரிக்கென தனியான ஓர் இணையத்தளம் பல வருடங்களுக்கு முன்னர்ஆரம்பிக்கப்பட்டு இயங்கிவருகின்றது.
  • கடந்த 2010ம் ஆண்டு முதல் கல்லூரியினால் ‘திக்ரா’ என்ற பெயரில் இஸ்லாமிய காலாண்டுச் சஞ்சிகை வெளியிடப்டுகின்றது.
  • கல்லூரியின் அமைவிடமான இந்நிலம் கல்லூரின் பெயரில் சொந்தமாக வாங்கப்பட்டுள்ளது. அத்துடன் எமது பேக்கரி அமைந்துள்ள காணியும் சில வருடங்களுக்கு முன் சுமார் 60 லட்சம் ரூபாவுக்கும் வருமானத்திற்காக முதலீடு நோக்கில் வேறு ஒரு காணி 21 லட்சம் ரூபாவுக்கும் வாங்கப்பட்டுள்ளது.
  • இரண்டரை மில்லியன் ரூபா செலவில் மாணவர் விடுதிக்கான கட்டில்களும் கபட்களும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
  • வல்ல அல்லாஹ்வின் உதவியால் இப்பிரதேச முஸ்லிம்களுக்கு மத்தியில் வாராந்த மாதாந்த வகுப்புக்கள், பிரசாரங்கள் மூலம் நூதனங்களை இனம் காட்டி இஸ்லாத்தை அதன் தூய வடிவில் போதிப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றி காணப்பட்டுள்ளது.
  • சில நலன்புரி நிறுவனங்களின் அனுசரணையுடன் இவ்வூரிலும் தென் மாகாணத்தின் பல பிரதேசங்களிலும் சமூக சேவைகளை கல்லூரி பொறுப்பேற்று நடத்தியுள்ளது.
  • இலங்கைத் தாய் நாட்டின் தேசிய நலனையும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் கட்டிக் காப்பதில் கல்லூரியும் அதன் மாணவர்களும் பங்களிப்பு செய்து வருகின்றனர்.
  • ஒரு சில வருடங்களுக்கு முன் எமது பழைய மாணவர்களையும் நலன் விரும்பிகளையும் உள்ளடக்கி ‘கல்லூரி அபிவிருத்தி சங்கம்’ ஒன்று உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்றது.