செலவினங்களும் வருமானமும்

பொருளாதார நிலை 

தற்சமயம் கல்லூரியின் மாதாந்தச் செலவினங்கள் ஒரு மில்லியன் (1,800,000) ரூபாவைத் தாண்டி நிற்கின்றன . இதில் சம்பளம், மாணவர்கள் உட்பட சகலருக்குமான உணவு தங்குமிட வசதிகள், நிர்வாக, பராமரிப்புச் செலவுகள் ஆகியன அடங்கும்.

மாதாந்த செலவினங்களை ஈடுசெய்வதற்காக நிரந்தர வருமானத்திற்கான பல வழிகளை ஒழுங்கு செய்வது என்ற திட்டத்தின் கீழ் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் கல்லூரிக்குச் சொந்தமான பேக்கரியிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் மூலம் கல்லூரியின் மாதாந்தச் செலவில் ஏறக்குறைய ஓரளவு  ஈடுசெய்யப்படுகின்றது. தரமும் ருசியும் மிக்க இதன் உணவுப்பண்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதை காணலாம்.

‘அல் ஜவ்தா’ என்ற பெயரில் இயங்கும் இதனை முதல் தர பேக்கரியாக வளர்ச்சியடையச் செய்வதில் இதன் ஸ்தாபக முகாமையாளர் காலஞ்சென்ற அல்-ஹாஜ்  ஷிஹாப்தீன் அவர்கள் ஆற்றிய பங்கு என்றும் மறக்க முடியாததாகும். அல்லாஹ் அவருக்கு நற்கூலியை வழங்குவானாக.

செலவுகளை ஈடுசெய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட  ‘ஒரு நாள் செலவை பொறுப்பேற்றல்’ என்ற திட்டத்தின் கீழ் ஒரு சிலர் உதவ முன் வந்துள்ளனர். இவ்ழியில் உதவிவழங்க மேலும் பலருக்கு வாய்ப்பு உள்ளது .

  • தற்பொழுது ஒரு நாளைக்கான முழுச் செலவு 60,000 ரூபாவை தாண்டி நிற்கின்றது.
  • ஒரு நாள் உணவிற்கான செலவிற்கு மாத்திரம் 35,000 ரூபாய் தேவைப்படுகின்றது.

பணமாகவோ பொருளாகவோ உதவிகளை வழங்கலாம். ஷரீஆவிற்கு முரணில்லாத கல்லூரியின் தனித்துவத்தைப் பாதிக்காத நிபந்தனைகள் அற்ற உதவிகளை ஏற்றுக் கொள்வது என்ற நிலைப்பாட்டில் என்றும் உறுதியாக நிற்கும் கல்லூரியின் வாசல், நல்மனம் படைத்தவர்களின் உதவி ஒத்தாசைகளை வரவேற்க எப்பொழுதும் திறந்தே இருக்கின்றது.

மாதாந்த பட்ஜட்டில் அடிக்கொருமுறை ஏற்படும் துண்டு விழும் நிலை நிரந்தர வருமானத்திற்கான மேலும் பல வழிகளை பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தை நிர்வாகத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. பொருத்தமான இடங்களில் காணிகளை வாங்கி, கடைத் தொகுதிகள், வீடுகள் போன்றவற்றை அமைத்து அவற்றை வாடகைக்கு விடுவது கல்லூரியின் நிரந்தர வருமானத்திற்கான நிர்வாகத்தின் உத்தேச திட்டங்களில் பிரதானமானதாகும்.